Friday, May 9, 2008

மாதவப் பெருமாள் கருட சேவை

மாதவன் என்று ஓதவல்லீரேல் தீதொன்றும் அடையா ஏதம் சாராவே - நம்மாழ்வார்


மயூரபுரி என்னும் திருமயிலையில் திருமகளும், மண்மகளும் உடன் அமர ஆனந்த நிலைய விமானத்தில் அமர்ந்த கோலத்தில் கல்யாண மாதவனாக சேவை சாதிக்கின்றார் பெருமாள். தாயார் அமிர்தவல்லியாகவும், பெருமாள் ஸ்ரீ ராமராகவும், மஹா லக்ஷ்மி தாயாருக்கு சமர ஸ்லோகத்தை உபதேசிக்கும் பூவராஹராகவும் கூட சேவை சாதிக்க்கின்றனர் இத்தலத்தில் , ஆண்டாள் நாச்சியாருக்கும் தனி சன்னதி உள்ளது.

 
இத்தலத்தில் அமைந்துள்ள சந்தான புஷ்கரணி முன்பு பிருகு முனிவரின் ஆசிரமாக இருந்தது. மாசி மாதம் மக நட்சத்திரத்தன்று சகல தீர்த்தங்களும் இப்புஷ்கரணியில் கலப்பதாக ஐதீகம். அன்று இக்குளத்தில் நீராடினால் புத்திபப்பேறு கிட்டும், சகல செலவமும் கிட்டும் என்று பிரம்மண்ட புராணத்தில் மயூரபுரி மகாத்மியத்தில் கூறப்பட்டுள்ளது.

ஓடும் புள்ளேறி ஊர்ந்து வரும் மாதவப் பெருமாள்
பெருமாளின் அருட்கோலம் அருகாமையில்



"மாதவன் பேர் சொல்வதே ஒத்தின் சுருக்கு", அதாவது வேதத்தின் சாரம் மாதவன் என்னும் நாமாவை கூறுதலே என்று பாடுகின்றார் பூதத்தாழ்வார்.


கருட சேவை பின்னழகு
பேயாழ்வார்
ஹம்ச வாகனத்தில் பேயாழ்வார்
சோடச நாமாக்கள்

மருந்து உண்ணும் போது விஷ்ணு என்றும்
உணவு உட்கொள்ளும் போது ஜனார்த்தனா என்றும்
படுக்கச் செல்லும் போது பத்மநாபா என்றும்
திருமண காலத்தில் பிரஜாபதி என்றும்
யுத்த களத்தில் சக்ரதாரி என்றும்
இறுதி காலத்தில் நாராயணா என்றும்
நண்பர்களிடம் ஸ்ரீதரா என்றும்
கெட்ட சொப்பனம் கண்ட பின் கோவிந்தா என்றும்
சங்கட காலங்களில் மதுசூதனா என்றும்
தனி வழி செல்லும் போது நரசிம்மா என்றும்
நெருப்பினால் துன்பம் உண்டாகும் போது ஜலசாயினே என்றும்
தண்ணீரில் துன்பம் உண்டாகும் போது வராஹா என்றும்
மலை ஏறும் போது ரகு நந்தனா என்றும்
வீதியில் நடக்கும் போது வாமனா என்றும்
எங்கும் எப்போதும் மாதவா என்றும்

பெருமாளின் பதினாறு நாமாக்களை கூற நன்மை என்று இத்திருக்கோவிலில் ஒரு கல் வெட்டில் கண்டதை அன்பர்களாகிய உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.


சோர்வினால் பொறுள் வைத்ததுண்டாகில்
சொல்சொல்லென்று சுற்றமிருந்து
ஆர்வினாலும் வாய் திறவாதே
அந்தக்காலம் அடைவதன் முன்னம்
மார்வமென்பதோர் கோயிலமைத்து
மாதவன் என்பதோர் தெய்வத்தை நாட்டி
ஆர்வமென்பதோர் பூவிட வல்லார்க்கு
அரவதண்டத்திலுய்யலுமாமே. _ பெரியாழ்வார்



வானுடைய மாதவா! கோவிந்தா! என்றழைத்தக்கால்
நலமுடை நாரணன் தன் அன்னை நரகம்புகாள்.


ப்ருந்தாரண்ய ஸமீபிஸ்த மயூரபுரி வாஸினே அம்ருதவல்லி நாதாய மாதவாயாஸ்து மங்களம்
மஹதஹ்வய மஹத: ப்ரதயக்ஷ பலதாயினே ஸ்ரீமதே மாதவாயாஸ்து நித்யஸ்ரீர்: நித்ய மங்களம்

7 comments:

jeevagv said...

ஆகா, படங்களும், பெயர்களும் அருமை!

S.Muruganandam said...

நன்றி ஜீவா அவர்களே. தங்களுடைய மாதர் பிறை கண்ணியான் பதிவை அடியேனுடைய திருக்கயிலாய பதிவுடன் link செய்துள்ளேன். தாங்களும் சமயம் கிடைக்கும் போது திருக்கயிலாய தரிசனம் க்ண்டு மகிழுங்கள்.

கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன் என்ற பதத்திற்க்கான விளக்கம் கிட்டும்.
http"//kailashi. blogspot.com

வடுவூர் குமார் said...

சோடசநாமாக்கள் இவ்வளவு இருக்கா??

S.Muruganandam said...

ஆமாம் சோட்ச் நாமக்கள் பதினாறு உள்ளன. முடிந்தால் சம்ஸ்கிருத ஸ்லோகத்தை தர முயற்சி செய்கிறேன்.

சின்னப் பையன் said...

ஆஹா.. அருமை.. அருமை.. படங்களுக்கு நன்றி...

S.Muruganandam said...

வாருங்கள் ச்சின்னப்பையன் சார்.

சித்திரை பிரம்மோற்சவ பதிவில் பார்த்தசாரதி பெருமாளின் கருட சேவைஅயையும் ஏகாந்த சேவையும் சேவித்தீர்களா? இல்லை என்றால் சென்று சேவியுங்கள்.

துளசி கோபால் said...

அருமை.

ஆமாம், துவாதச நாமங்களில் பல ஷோடசநாமாவில் வருவதில்லையா?

கேசவா கேசவா