Showing posts with label திருமலை. Show all posts
Showing posts with label திருமலை. Show all posts

Thursday, April 28, 2016

திருமலை பௌர்ணமி கருடசேவை

நானேயோ தவம் செய்தேன் 

இராஜ கோபுரம் 

திருமலையில் பிரம்மோற்சவ கருட சேவை மிகவும் பிரசித்தம். அன்று மூலவர் அணியும் லக்ஷ்மி ஹாரம், மகரகண்டி, ஆண்டாள் சூடிக்களைந்த மாலை  அணிந்து மூலவராகவே ஸ்ரீநிவாசப் பெருமாள் கருடசேவை தந்தருளுகின்றார். ஆகவே அன்றைய தினம் லட்சக்கணக்கில் பக்தர்கள் திருமலையில் குழுமுகின்றனர். அன்றைய தினம் பெருமாளை சேவிக்க முடிந்தால் அதுவே மிகுந்த பாக்கியம். 


மத கஜங்கள் முன் செல்கின்றன

கோலாட்டக்குழுவினர் பலர் 


கருட சேவை ஆரம்பம் 

அடுத்து  இரதசப்தமி அன்று பெருமாள் ஏழு வாகனத்தில் அதிகாலையிகிருந்து இரவு வரை  சேவை தந்து அருளுகின்றார் என்பதால் அன்றும் பக்தர் கூட்டம் அதிகமாக இருக்கும். மேலும் கருட சேவை  சமயத்தில் திருமலையில் இருந்தால்தான் பெருமாளை கருடனில் சேவிக்க முடியும். 


இராஜகோபுரத்திற்கு எதிரே பெருமாள் 



தெற்கு மாட வீதியில் 


இன்றும் பெருமாள் லக்ஷ்மிஹாரத்துடன் சேவை சாதிக்கின்றார். 


பின்னழகு 







இப்போது சில வருடங்களாக ஒவ்வொரு பௌர்ணமியன்றும் கருடசேவை தந்தருளுகின்றார் திருமலையப்பன். அடியேன் ஒரு பௌர்ணமியன்று திருமலையில் தங்கும் பாக்கியம் கிட்டியது. கூட்டம் அதிகமில்லை என்பதால் மலையப்பசுவாமி அலங்கார மண்டபத்தில் இருந்து எழுந்தருளி  திரும்பி வரும் வரை பெருமாளுடன் வந்து அவரது கருடசேவையை முழுதுமாக சேவிக்கும் பாக்கியமும் கிட்டியது. அப்போது எடுத்த படங்கள் இப்பதிவில் இடம் பெறுகின்றன. 

கிழக்கு மாடவீதியில் பெருமாள்




 சுவாமி புஷ்கரிணி 

சுவாமிக்கு அடுக்கு தீபாராதனை

 கிழக்கு மாட வீதியில் சுவாமி புஷ்கரிணி கரைக்கு  வந்தவுடன் பெருமாள்  புஷ்கரிணி நோக்கி திரும்பி நிற்கிறார். ஏக காலத்தில் பெருமாளுக்கும் புஷ்கரிணிக்கும் தீபாராதணை நடைபெறுகின்றது. 


பக்தர்களுக்கு சேவை சாதித்தவாறே பின்புறமாக மலையப்பசுவாமி
 அலங்கார மண்டபத்திற்கு எழுந்தருளுகின்றார்.



கருட சேவை நிறைவாக திரையிடப்படுகின்றது. 



தூரத்தில் இருந்துதான் புகைப்படம் எடுக்க முடிந்தது என்பதால் படங்கள் தெளிவாக இல்லை மன்னிக்கவும். 


"நானேயோ தவம் செய்தேன்"  என்றபடி ஸ்ரீவாரி சேவையில் ஒரு வாரம் திருமலையிலேயே  பெருமாளின் திருவடியிலேயே  தங்கி பல்வேறு சேவைகளையும் சேவித்து  திருவேங்கடவனின் தரிசனமும் பல்முறை பெற்ற ஒரு ஆனந்த,  அற்புத கிடைத்தற்கரிய  வாய்ப்பின் போது இந்த பௌர்ணமி கருட சேவையை முழுதுமாக சேவிக்கும் பாக்கியம் கிட்டியது. 

Monday, February 27, 2012

கருடன் வந்து சேவித்த கருட சேவை

ஏழுமலையான் ரத சப்தமி கருட சேவை

 மலையப்ப சுவாமி 


தை மாதத்தின் வளர்பிறை சப்தமி என்னும் ஏழாம் நாள் இரத சப்தமி என்றும் சூரிய ஜெயந்தி என்றும் கொண்டாடப்படுகின்றது.


 ரத சப்தமிக்காக திருமலை அலங்கரிக்கப்படிருக்கும் பாங்கு 

இரத சப்தமியன்று அருணன் சாரதியாக இருந்து செலுத்தும் ஏழு குதிரைகள் பூட்டிய சூரிய நாராயணரின் இரதம் தெற்கிலிருந்து வடக்கு நோக்கி திரும்புவதாக ஐதீகம்.

ஆனந்த நிலைய விமானம்


 சூரியன் தனுர் ராசியிலிருந்து மகர ராசிக்கு மாறும் நாள் என்பாரும் உண்டு.  இரத சப்தமி என்னும் இந்நாளில் சூரியனுக்கு விசேஷ ஓளி பிறப்பதாக புராணங்கள் கூறுகின்றன.

 
கருட வாகனத்தில் எழிலாக மலையப்பசுவாமி

இரதத்தை எப்படி செழுமையாக செலுத்த வேண்டுமோ அது போல ஐம்புலன்களால் பல் வேறு திசைகளில் இழுக்கப்பட்டு தடுமாறும் மனத்தை இறைவனிடம் செழுத்தவேண்டும் என்பதை உணர்த்தும் நாள் இரத சப்தமி நாள்.

Add caption
 காய்சின பறவையேறி பறந்து வரும்  மலையப்பசுவாமி

தலையிலும்,கண்கள், செவிகள், கை,கால், தோள்களில்  ஏழு எருக்கம் இலைகள் வைத்து குளிக்கும் நாள். இவ்வாறு சூரிய ஒளி நம் மேல் பட நீர் நிலைகளில் குளிப்பது ஞானம் பெற இது உதவுதாக ஐதீகம்.

பெருமாள் ஏழு வாகனங்களில் சேவை சாதிக்கும் நாள்:
தென் இந்தியாவில் அனைத்து வைணவத் திருதலங்களிலும் பெருமாள் அதிகாலை சூரிய உதயம் தொடங்கி, சூரிய அஸ்தமனம் வரை பல்வேறு வாகனங்களில் சேவை சாதிக்கும் நாள். சூரியன் தனது வடக்கு நோக்கிய பயணத்தை துவக்கும் நாளில் சூரியன் பெருமாளை வணங்கி தன் பயணத்தை தொடங்க பெருமாள் சேவை சாதிப்பதாக ஐதீகம்.








திருப்பதியில் ஏழுமலைகள் உள்ளதால், அந்த மலைகளை சூரியனின் குதிரைகளாகக் கருதி, ரதசப்தமி விழா பெரிய அளவில் கொண்டாடப்படுகிறது. அன்றைய விழாவுக்கு, “அர்த்த பிரம்மோற்சவம்’ என்று பெயர். “அர்த்த’ என்றால், “பாதி!’ பொதுவாக பத்து நாள் விழாக்களைத் தான், “பிரம்மோற்சவம்’ என்பர். ஒரே நாளில் ஏழு வாகனங்களில் சுவாமி பவனி வருவதால், இதை, “அர்த்த பிரம்மோற்சவம்’ என்கின்றனர். திருமலையில் அதிகாலையில் மலையப்பசுவாமி சூரியப் பிரபையில் சேவை சாதிக்கின்றார், பின் சேஷ வாகனம், கருட வாகனம், அனுமந்த வாகனம், கற்பக விருட்ச வாகனம், சர்வ பூபாள வாகனம், நிறைவாக சூரிய அஸ்தமன காலத்தில் சந்திரப் பிரபை வாகனத்தில் சேவை சாதித்து வைர வைடுரிய நகைகள் மின்ன சர்வ அலங்காரத்தில் சேவை சாதிக்கும் நாள்.



கருட வாகன சேவையைக் காண வந்த கருடன் 

(படத்தை பெரிதாக்கிக் கருடனை சேவியுங்கள்)






கருட சேவையும் ஆனந்த நிலைய விமானமும் 

இந்த வருடத்திய (2012)  இரத சப்தமியின் கருட சேவை காட்சிகள் இப்பதிவில் இடம் பெறுகின்றன.  





அடுத்ததடவை செல்லும்போது சஹஸ்ர தீபாலங்கார மண்டபத்தில் மேல் இருக்கும் ஆஞ்சனேயர் செந்தூர அனுமனையும் படம் எடுத்து வரவேண்டுமாய்ப் பிரார்த்தித்துக் கொள்ளுகிறேன். என்று வேண்டிய வல்லியம்மாவிற்காக  செந்தூர ஹனுமன் தரிசனம். 


அதிசயம் தான் பெருமாள் கருட சேவை தரும் போது மேலே இந்த கருடன் மேலே வட்டமிட்டு பெருமாளை சேவித்து விட்டு சென்றது.