திருவல்லிக்கேணி இராம நவமி

பெருமாள் நி்த்ய கருட சேவை சாதிக்கும் தலம் தான் திருவல்லிக்கேணி .
மீனமர் பொய்கைநாள் மலர் கொய்வான்
வேட்கையினோடு சென்றிழிந்தகானமர்வேழம் கையெடுத்தலறக் கராஅதன் காலினைக் கதுவ
ஆனையின் துயரம் தீரப்புள்ளூர்ந்து சென்றுநின்று ஆழி தொட்டானை
தேனமர் சோலை மாடமாமயிலைத் திருவல்லிக்கேணிக் கண்டேனே
என்று திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்த கஜேந்திர வரதராக நித்ய கருட ஸேவை சாதிக்கின்றார் பெருமாள். பெரிய திருவடியின் தோளிலே சங்கு சக்ரங்களுடன் பெருமாள் சேவை சாதிக்கும் அழகே அழகு. இத்தலத்தின் பார்த்தசாரதி மற்றும் தெள்ளிய சிங்கரின் தங்க கருட வாகன சேவையை முன்னர் கண்ட தாங்கள் இப்பதிவில் ஸ்ரீராமரின் கருட சேவையை காணுங்கள் அன்பர்களே.

இரவும் பகலும்துதி செய்யநின்ற இராவணாந்தகனை எம்மானை
குரவமேகமழும் குளிர்பொழிலூடு குயிலொடு மயில்கள்நின்றால
இரவியின் கதிர்கள் நுழைதல் செய்தறியாத் திருவல்லிக்கேணி கண்டேனே.
( ஆழ்வார் காலத்தில் திருவல்லிக்கேணி சூரியனின் கதிர்கள் வராத அடர்ந்த காடாக இருந்திருக்கின்றது இன்றோ காங்க்ரீட் காடாகிவிட்டதே)

ஸ்ரீ இராமர் கருட சேவை பின்னழகு

மேலும் இத்திருக்கோவிலைப்பற்றி தெரிந்து கொள்ள கிளிக்குங்கள்
இனி கோதண்டராமரின் கருட சேவையை சேவியுங்கள்.