Monday, August 18, 2008

ஆடி கருடன் - கஜேந்திர மோக்ஷம்

குட்டத்து கோல் முதலை துஞ்சக் குறித்தெறிந்த
சக்கரத்தார் ஸ்ரீநிவாசர் (closeup)


முன் பதிவில் பார்த்தோம் ஆனியில் சுவாதியன்று பெரியாழ்வார் எம்பருமானுக்கு பல்லாண்டு பாடியதை குறிக்கும் வகையில் கருட சேவை நடைபெறுவதை, அது போல பூரண சரணாகதி தத்துவத்தை உணர்த்தும் கஜேந்திர மோக்ஷத்தை உணர்த்தும் வகையில் ஆடி பௌர்ணமியன்று விஷ்ணுவாலயங்களில் கருட சேவை நடைபெறுகின்றது. திருமயிலை வேதாந்த தேசிகர் தேவஸ்தானம் கஜேந்திர மோக்ஷ கருட சேவையின் சில படங்கள் இப்பதிவில் கண்டு களியுங்கள்.


ஆனைக்காக பொலிந்த கருடன் மேல் வரும் கரியான்
எழிற்கோலம் காணக் கண் கோடி வேண்டும்

பூர்வாச்சாரியார்கள் கஜேந்திர மோக்ஷத்தைப் பற்றி கூறும் போது பெருமாளே தாங்கள் யாணையை முதலையிடமிருந்து காத்தது பெரிதல்ல ஆனால் வந்த வேகம்தான் அருமை என்று பூரண சரணாகதி செய்த க்ஷணமே நாம் அவனுடைய சொத்து என்று உணர்த்துகின்றனர்
.

ஆடும் பறவையில் எம்பெருமான் பின் கோலம்
ஓடும் புள்ளேறி
சூடும் தண் துழாய்
நீடு நின்று அவை
ஆடும் அம்மானே

பைங்கண் மால் யானை படுதுயரம் காத்தளித்த செங்கண் மால் திருவடிகளே சரணம்

படங்களுக்கு நன்றி - http://www.svdd.com/

கஜேந்திர மோட்சம் பதிவைப் படிக்க கிளிக்குக இங்கே

11 comments:

Kavinaya said...

பெருமாளின் முன்கோலமும் பின்கோலமும் எழிற்கோலமாகி மனதைக் கொள்ளை கொண்டன. கஜேந்திர மோட்சமும் வாசித்தேன். எனக்கு மிகப் பிடித்த கதை. மிக்க நன்றி.

S.Muruganandam said...

மிக்க நன்றி கவிநயா.

இப்பதிவு கருட சேவையின் 23வது பதிவு, 25ம் பதிவில் தங்கள் ஒரு கவிதையும் இணைக்க எண்ணம்.

ஒரு கவிதை கருட சேவையைப் பற்றி எழுதி வழங்க முடியுமா?

Kavinaya said...

ஆஹா. அவனருள் இருந்தால் அவசியம் தருகிறேன். 25-ம் பதிவு எப்போது போடுவீர்கள்?

S.Muruganandam said...

எப்படியும் இரண்டு வாரங்கள் ஆகும், என்னுடைய ஈ- மெயிலுக்கு அனுப்பி வையுங்கள்.

Expatguru said...

பெருமாளின் திருக்கோலத்தை காண கண் கோடி வேண்டும். அழகான பதிவு, அதைவிட அழகான புகைப்படங்கள்.

S.Muruganandam said...

எல்லாம் அவன் செயல்.

வந்து சேவித்ததற்கு நன்றி,

நாராயண, நாராயண

Kavinaya said...
This comment has been removed by a blog administrator.
S.Muruganandam said...
This comment has been removed by the author.
வல்லிசிம்ஹன் said...

பெருமாளின் இரு கோலங்களும் மீக அருமை. என்ன அழகு என்ன அழகு.
பார் பார் என்று அழைக்கின்றான்.
என்னப்பனே காப்பாத்து.

வல்லிசிம்ஹன் said...

பெருமாளின் இரு கோலங்களும் மீக அருமை. என்ன அழகு என்ன அழகு.
பார் பார் என்று அழைக்கின்றான்.
என்னப்பனே காப்பாத்து.

S.Muruganandam said...

வாருங்கள் வல்லியம்மா பெருமாள் சௌந்தரராஜர் அல்லவா?