தை அமாவாசை அன்று (26-01-09) சூரிய கிரகணம் வருவதால் இவ்வருட திருநாங்கூர் கருட சேவை பௌர்ணமியன்று அதாவது 09-02-09 மற்றும் 10-02-09 அன்று நடைபெற உள்ளது.
சென்ற வருடம் அடியேன் தரிசித்த திருநாங்கூர் 11 கருட சேவையை கண்டு களித்தீர்கள் இப்பதிவுகளில் திரு. தனுஷ்கோடி அவர்கள் சென்ற வருடம் தரிசித்த கருட சேவையை கண்டு களியுங்கள். கருடன்கள் எல்லாம் தங்க கவசம் பூண்டுள்ளனர், காணக் கிடைக்காத காட்சியை கண்டு களியுங்கள்.
*****************
திருநறையூர் (நாச்சியார் கோவில்) பெருமாளால் வைணவராக சமாஸ்ரணம் செய்யப் பெற்ற, திருமங்கை மன்னன், பரகாலன், நீலன், ஆலிநாடன், கலிகன்றி, மங்கையர் கோன், மங்கை வேந்தன், கலியன் என்றெல்லாம் அழைக்கப்படும் திருமங்கை ஆழ்வார் இந்த திவ்ய தேசங்களில் திருக்குறையலூரிலேதான் அவதரித்தார். மணக் கோலத்தில் பெரிய பிராட்டியாரோடு வந்த பெருமாளால் திருமணங்கொல்லையில் அஷ்டாத்திர மந்திரோபதேசமும் பெற்றார், இந்த பதினோரு திவ்ய தேசங்களையும் இவர் மட்டுமே மங்களாசாசனமும் செய்துள்ளார். திருமங்கையாழ்வாரோடு பெரிதும் தொடர்புடையவை இத்திவ்ய தேசங்கள்.
இத்தகைய சிறப்புகளைக் கொண்ட திருநாங்கூர் திவ்ய தேசங்களாவன:
1. திருமணி மாடக் கோவில்:
மூலவர்-நாராயணன், நந்தா விளக்கு அமர்ந்த திருக்கோலம்,
உற்சவர்- நாராயணன், அளந்தற்கரியான்,
தாயார்- புண்டரீக வல்லி,
தீர்த்தம்- இந்திர புஷ்கரிணி, ருத்ர புஷ்கரிணி,
நந்தா விளக்கே! அளத்தற்கு அரியாய்! நரநாராயணனே! கருமாமுகில் போல் எந்தாய்! எமக்கே அருளாயென நின்று இமையோர் பரவும் இடம் எத்திசையும்
2.திருவைகுந்த விண்ணகரம் :
மூலவர்- திருவைகுந்த நாதன், தாமரைக் கண்ணுடைய பிரான் உபய நாச்சியார்களுடன் அமர்ந்த திருக்கோலம்,
தாயார்- வைகுந்த வல்லி.
தீர்த்தம்- லக்ஷ்மீ புஷ்கரிணி, உதங்க புஷ்கர்ணி, விரஜா தீர்த்தம்,
திருமங்கையாழ்வார் பாசுரம்:
சலங்கொண்ட இரணியனது அகல்மார்வம் கீண்டு
3.திரு அரிமேய விண்ணகரம் :
மூலவர்- குடமாடுங் கூத்தர் அமர்ந்த திருக்கோலம்,
உற்சவர்- சதுர் புஜ கோபாலர்,
தாயார்- அம்ருத கட வல்லி.
தீர்த்தம்- கோடி தீர்த்தம், அமுத தீர்த்தம்,
திருமங்கையாழ்வார் பாசுரம்:
திருமடந்தைமண்மடந்தை இருபாலும் திகழ
4.திருத் தேவனார் தொகை :
மூலவர்- தெய்வ நாயகன் நின்ற திருக்கோலம்,
உற்சவர்- மாதவப் பெருமாள்,
தாயார்-கடல் மகள் நாச்சியார்.
தீர்த்தம்- சோபன தீர்த்தம்,
திருமங்கையாழ்வார் பாசுரம்:
போதலர்ந்தபொழிற்சோலைப் புறமெங்கும்பொருதிரைகள்
தேதெனவென்றுஇசைபாடும்திருத்தேவனார்தொகையே.
5.திருவண் புருடோத்தமம் :
மூலவர்- புருடோத்தமன் நின்ற திருக்கோலம்,
தாயார்- புருடோத்தம நாயகி.
தீர்த்தம்- திருப்பாற் கடல் தீர்த்தம்,
விமானம்- சஞ்žவி விமானம்.
திருமங்கையாழ்வார் பாசுரம்:
கம்பமாகடலடைத்துஇலங்கைக்குமன் கதிர்முடியவை பத்தும்
வம்புலாம்கமுகோங்கியநாங்கூர் வண்புருடோத்தமமே.
மூலவர்- பேரருளாளன், ஹேம ரங்கர்,செம் பொன் செய் அரங்கர், தாமோதரன் நின்ற திருக்கோலம்,
உற்சவர்-ஹேமாங்கர்(செம்பொன் அரங்கர்),
தாயார்- அல்லி மாமலர் நாச்சியார்.
தீர்த்தம் - ஹேம புஷ்கரிணி,
திருமங்கையாழ்வார் பாசுரம்:
பேரணிந்துஉலகத்தவர்தொழுதேத்தும் பேரர்ளானன்எம்பிரானை
மூலவர்-செங்கண்மால்,அரங்கநாதர், லக்ஷ்மிரங்கர் புஜங்க சயன திருக்கோலம்,
தாயார்- செங்கமலவல்லி
தீர்த்தம்- சூரிய புஷ்கரிணி,
திருமங்கையாழ்வார் பாசுரம்:
மாற்றரசர்மணிமுடியும்திறலும்தேசும்
தாயார்- திருமாமகள் நாச்சியார்.
தீர்த்தம்- சந்திர புஷ்கரிணி,
விமானம் -சாம்பூந்தம் என்ற பொன்னாலானது.
திருமங்கையாழ்வார் பாசுரம்:
தூம்புடைப்பனைக்கைவேழம் துயர்கெடுத்தருளி மன்னு
9.திருக்காவளம்பாடி :
மூலவர்-கோபாலகிருஷ்ணன்(இராஜ கோபாலன்) ருக்மணி சத்ய பாமையுடன் நின்ற திருக்கோலம்,
தாயார் -மடவரல் மங்கை, செங்கமல வல்லி.
தீர்த்தம்- தடமலர்ப் பொய்கை,
திருமங்கையாழ்வார் பாசுரம்:
தாவளந்துஉலகமுற்றும் தடமலர்ப்பொய்கைபுக்கு
மூலவர்- ஸ்ரீநிவாசன், கண்ணன், நாராயணன், அண்ணன் பெருமாள், நின்ற திருக்கோலம்,
தாயார்- அலர்மேல் மங்கை.
தீர்த்தம்-வெள்ளைக்குளம்,
இத்தலத்திலே தான் திருமங்கை ஆழ்வாரின் தர்ம பத்தினி குமுத வல்லி நாச்சியார் கண்டெடுக்கப்பட்டார்.
திருமங்கையாழ்வார் பாசுரம்:
கண்ணார்கடல்போல் திருமேனிகரியாய்!
11. திருப்பார்த்தன் பள்ளி :
மூலவர்: தாமரையாள் கேள்வன்,
உற்சவர்- பார்த்தசாரதி,
தாயார்- தாமரை நாயகி.
தீர்த்தம் - சங்கசரஸ் கங்கைத் தீர்த்தம்,
திருமங்கையாழ்வார் பாசுரம்:
கவளயானைக்கொம்பொசித்த கண்ணனென்றும் காமருசீர்
இவ்வாறு பொன்னி நதி பாய்ந்து வளம் சிறக்கும் திருநாங்கூர்ப்பதிகளை மங்களாசாசனம் செய்த இந்த திவ்ய தேசப் பெருமாள் அனைனவரும், திருமங்கையாழ்வரும் கலந்து கொள்ளும் மிக சிறப்பு வாய்ந்த ஏகாதச கருட சேவை திருவிழா வெகு சிறப்பாக ஒவ்வொரு வருடமும் தை அமாவாசைக்கு அடுத்த நாள் நடைபெறுகின்றது. அந்த தெய்வீக அனுபவத்தை தாங்களும் பெற தங்களை என்னுடன் வருமாறு தங்களை அழைக்கின்றேன். " பெருமாளை பெரிய திருவடியாம் கருட வாகனத்தில் சேவித்தால் மறு பிறவி கிடையாது என்பது ஐதீகம்", இங்கு பதினோரு பெருமாள்களையும் ஒரே நேரத்தில் சேவிக்கும் அற்புதமான வாய்ப்பு கிடைக்கின்றது. அடுத்த பதிவில் அந்த தெய்வீக அனுபவத்தை பெருமாள் கொடுத்த சேவையை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
படங்கள் உதவி : திரு. தனுஷ்கோடி அவர்கள். 2008 கருட சேவையின் படங்கள். இவ்வருட கருட சேவை 10.102.09 அன்று நடைபெறுகின்றது.
திருநாங்கூர் கருட சேவை இன்னும் தொடரும் ...............
7 comments:
திரு தனுஷ்கோடிக்கும் உங்களுக்கும் மிக்க நன்றி.
அவர் நடத்துகின்றார்.
ஓம் நமோ நாராயணாய.
திருமங்கையாழ்வார் திருவடிகளே சரணம்.
அருமை. மிக்க நன்றி கைலாஷி. தனுஷ்கோடி அவர்களுக்கும்.
நன்றி கவிநயா,
இன்னும் மூன்று பதிவுகள் உள்ளன அவற்றையும் வந்து சேவியுங்கள்.
ஒரு கருடன் பறந்தாலே அமர்க்களப்படும்! பதினொரு கருடன்களா! அமர்க்களம் கைலாஷி ஐயா!
பதினோரு திவ்யதேசங்கள், படம் + பாசுரம் கொடுத்ததும் அருமை! நன்றி!
மங்களாசாசனத்தின் போது பதினோரு பாசுரங்களின் முதல் பாடல் சேவிக்கப்படும் எனவே அவற்றை இனைத்தேன். நன்றி KRS ஐயா.
அற்புதமான கருடசேவைப்பதிவு.
ஓம் நமோ நாரயணாய
Post a Comment