ஏழுமலையான் ரத சப்தமி கருட சேவை
மலையப்ப சுவாமி
தை மாதத்தின் வளர்பிறை சப்தமி என்னும் ஏழாம் நாள் இரத சப்தமி என்றும் சூரிய ஜெயந்தி என்றும் கொண்டாடப்படுகின்றது.
ரத சப்தமிக்காக திருமலை அலங்கரிக்கப்படிருக்கும் பாங்கு
இரத சப்தமியன்று அருணன் சாரதியாக இருந்து செலுத்தும் ஏழு குதிரைகள்
பூட்டிய சூரிய நாராயணரின் இரதம் தெற்கிலிருந்து வடக்கு நோக்கி
திரும்புவதாக ஐதீகம்.
சூரியன் தனுர் ராசியிலிருந்து மகர ராசிக்கு மாறும் நாள் என்பாரும் உண்டு. இரத சப்தமி என்னும் இந்நாளில் சூரியனுக்கு விசேஷ ஓளி பிறப்பதாக புராணங்கள் கூறுகின்றன.
ஆனந்த நிலைய விமானம்
சூரியன் தனுர் ராசியிலிருந்து மகர ராசிக்கு மாறும் நாள் என்பாரும் உண்டு. இரத சப்தமி என்னும் இந்நாளில் சூரியனுக்கு விசேஷ ஓளி பிறப்பதாக புராணங்கள் கூறுகின்றன.
கருட வாகனத்தில் எழிலாக மலையப்பசுவாமி
Add caption |
காய்சின பறவையேறி பறந்து வரும் மலையப்பசுவாமி
தலையிலும்,கண்கள், செவிகள், கை,கால், தோள்களில் ஏழு எருக்கம் இலைகள் வைத்து குளிக்கும் நாள். இவ்வாறு சூரிய ஒளி நம் மேல் பட நீர் நிலைகளில் குளிப்பது ஞானம் பெற இது உதவுதாக ஐதீகம்.
பெருமாள் ஏழு வாகனங்களில் சேவை சாதிக்கும் நாள்:
தென் இந்தியாவில் அனைத்து வைணவத் திருதலங்களிலும் பெருமாள் அதிகாலை சூரிய உதயம் தொடங்கி, சூரிய அஸ்தமனம் வரை பல்வேறு வாகனங்களில் சேவை சாதிக்கும் நாள். சூரியன் தனது வடக்கு நோக்கிய பயணத்தை துவக்கும் நாளில் சூரியன் பெருமாளை வணங்கி தன் பயணத்தை தொடங்க பெருமாள் சேவை சாதிப்பதாக ஐதீகம்.
திருப்பதியில் ஏழுமலைகள் உள்ளதால், அந்த மலைகளை சூரியனின் குதிரைகளாகக் கருதி, ரதசப்தமி விழா பெரிய அளவில் கொண்டாடப்படுகிறது. அன்றைய விழாவுக்கு, “அர்த்த பிரம்மோற்சவம்’ என்று பெயர். “அர்த்த’ என்றால், “பாதி!’ பொதுவாக பத்து நாள் விழாக்களைத் தான், “பிரம்மோற்சவம்’ என்பர். ஒரே நாளில் ஏழு வாகனங்களில் சுவாமி பவனி வருவதால், இதை, “அர்த்த பிரம்மோற்சவம்’ என்கின்றனர். திருமலையில் அதிகாலையில் மலையப்பசுவாமி சூரியப் பிரபையில் சேவை சாதிக்கின்றார், பின் சேஷ வாகனம், கருட வாகனம், அனுமந்த வாகனம், கற்பக விருட்ச வாகனம், சர்வ பூபாள வாகனம், நிறைவாக சூரிய அஸ்தமன காலத்தில் சந்திரப் பிரபை வாகனத்தில் சேவை சாதித்து வைர வைடுரிய நகைகள் மின்ன சர்வ அலங்காரத்தில் சேவை சாதிக்கும் நாள்.

கருட வாகன சேவையைக் காண வந்த கருடன்
(படத்தை பெரிதாக்கிக் கருடனை சேவியுங்கள்)
(படத்தை பெரிதாக்கிக் கருடனை சேவியுங்கள்)
கருட சேவையும் ஆனந்த நிலைய விமானமும்
இந்த வருடத்திய (2012) இரத சப்தமியின் கருட சேவை காட்சிகள் இப்பதிவில் இடம் பெறுகின்றன.
அடுத்ததடவை செல்லும்போது சஹஸ்ர தீபாலங்கார மண்டபத்தில் மேல் இருக்கும்
ஆஞ்சனேயர் செந்தூர அனுமனையும் படம் எடுத்து வரவேண்டுமாய்ப்
பிரார்த்தித்துக் கொள்ளுகிறேன். என்று வேண்டிய வல்லியம்மாவிற்காக செந்தூர ஹனுமன் தரிசனம்.
அதிசயம் தான் பெருமாள் கருட சேவை தரும் போது மேலே இந்த கருடன் மேலே வட்டமிட்டு பெருமாளை சேவித்து விட்டு சென்றது.
8 comments:
அன்பு கைலாஷி சார், இப்போதுதான் திருமல சானலில் அதிசயமாக ஆஞ்சனேயரைக் காண்பித்தார்கள். கண்சிகித்சைக்குக் கிளம்புவத்ற்கு முன்னால் மெயில் பார்த்துவிடலாம் என்று கணினியைத் திறதேன். கண்முன் இன்னும் பிரகாசமாய் நான் இருக்கிறேன் என்று வந்து குதித்துவிட்டார். ஸ்ரீராம ஹனுமான். எத்தனை அன்பு உங்களுக்குத்தான். என் மனம் நிறைந்த நன்றி என்பது வெறும் வார்த்தை. மேலான தரிசனம் கிடைத்தது .கொடுத்தீர்கள்.
நல்ல சகுனம்தானே வல்லியம்மா. தங்கள் கண் சிகிச்சை நன்றாக நடந்து மீண்டும் கண் நன்றாக தெரிய அந்த எழுமலையானிடம் பிரார்தித்துக் கொள்கிறேன்.
சேவை செய்வதற்கு வாய்ப்பு அளித்ததற்கு மிக்க நன்றி.
பார்க்கப் பார்க்கப் பரவசம்! எத்தனை நன்றி சொன்னாலும் தகும். மிகவும் நன்றி.
ஐயா, அனைவருக்கும் வணக்கம், எனக்கு கருடர் பத்து பாடல் கிடைக்கும் இடம் சொல்லுங்களேன்???
ஐயா, தயவு செய்து கருடர் பத்து பாடல் அனுப்பி வைக்கவும்...
parthi.murugesan@gmail.com
//ஐயா, தயவு செய்து கருடர் பத்து பாடல் அனுப்பி வைக்கவும்//
கருடபத்து பாடல் கிடைக்கவில்லை கிடைத்தவுடன் அனுப்பி வைக்கிறேன்.
இதில் தாங்கள் கருடபத்தை பார்க்கலாம்/ கேட்கலாம்
http://www.youtube.com/watch?v=1bmc40G71bs
சற்று பொறுத்து கொள்ளுங்கள்.
நேற்றுத்தான் மயிலாப்பூர் சென்று கிரி ட்ரேடிங்கில் கருடபத்து வாங்க முடிந்தது. மின்னஞ்சம் மூலம் தங்களுக்கு அனுப்பியுள்ளேன். புத்தகம் வேண்டுமென்றால், முகவரியை தெரியப்படுத்தினால் அனுப்பி ைக்கிறேன்.
கருடபத்தை அறிமுகம் செய்து வைத்ததற்கு மிக்க நன்றி.
கருடபத்து தமிழ்பாடல்ஆடியோ,வீடியோ தங்களிடம் இருந்தால் என் மின்னஞ்சல் முகவரி ntkrishnan1992@gmail.com க்கு அனுப்புங்கள்.
Post a Comment