ஊத்துக்காடு காளிங்க நர்த்தன கிருஷ்ணர் சம்ப்ரோக்ஷணம்
கண்ணன் செய்த பால லீலைகள் பலவற்றுள் காளிங்க நர்த்தனமும் ஒன்று. யமுனையை அசுத்தப்படுத்தி வந்த காளிங்கனை அடக்கி அதன் தலை மீது நின்று அதன் விஷத்தை நீக்கி அவனை கடலுக்கு ஓட்டினான் கண்ணன். அந்த காளீங்க நர்த்தனராக உற்சவராக, சுயம்புவாக கண்ணன் எழுந்தருளி அருள் பாலிக்கும் தலம்தான் கும்பகோணத்திற்கு அருகில் உள்ள ஊத்துக்காடு.
குழலூதி மனமெல்லாம் கொள்ளை கொண்டபின்னும்
குறையேதும் எனக்கேதடீ! சகி! குறையேதும் எனக்கேதடீ!
போன்ற அருமையான கீர்த்தனைகளை ஊத்துக்காடு வேங்கட சுப்பையர் இந்த காளிங்க நர்த்தனரின் தரிசனம் பெற்ற பின் பாடியுள்ளார்.
இத்திருக்கோவில் தற்போது புதிதாக கட்டப்பட்டு விரைவில் சம்ப்ரோக்ஷணம் நடைபெறவுள்ளது. முடிந்த அன்பர்கள் கலந்து கொள்ளவேண்டுமாய் பிரார்தித்துக்கொள்கின்றேன்.
காமதேனுவின் கன்றுகளான நந்தினி மற்றும் பட்டிக்காக சுயம்புவாக பெருமாள் காலில் காளியன் தீண்டிய காயங்களுடனும், அற்புதமாக காளியனின் வாலில் ஒரு விரல் மட்டும் தொட்டுக்கொண்டிருக்க அற்புத சிலையாக தானே தோன்றியதாக ஐதீகம், வேங்கடகவியும் நாரதரின் மறு அவதாரம் என்பது ஐதீகம்.
நடைபெறும் திருப்பணிகளிலும் அன்பர்கள் பங்கு கொள்ள வேண்டுகிறேன்.
கருட யாத்திரையின் நிறைவாக திருநாங்கூர் திவ்ய தேசங்களை சேவித்தோம் அதை அடுத்த பதிவில் காணலாம் அன்பர்களே.
2 comments:
அருமை
நன்றி
Post a Comment