இப்பதிவில் நாம் சேவிக்கின்ற கருடசேவை சென்னை மேற்கு மாம்பலம் கோவிந்தன் சாலையில் அமைந்துள்ள ஆதிகேசவப் பெருமாளின் கருடசேவை ஆகும். இவ்வாலயத்தில் உள்ள சேசவனை உடையவர் ஆராதித்துள்ளார் என்பதால் இவர் அருள்மிகு பாஷ்யக்காரசுவாமி சென்னை ஆதிகேசவப் பெருமாள் என்றழைக்கப்படுகின்றார்.முஸ்லிம்களின் படையெடுப்பின் போது மாபிலமாக அதாவது பெரிய குகையாக இருந்த இத்தலத்தில் மற்ற ஆலயங்களின் உற்சவ மூர்த்த்திகள் பாதுகாக்கப்பட்டதால் இவர் சென்னை ஆதிகேசவன் ஆனார்.
ஆகாசாத் பதிதம் தோயம் யதாகச்சதி ஸாகரம்
|
ஸர்வதேவ நமஸ்கார:
கேசவம் ப்ரதி கச்சதி ||
ஆகாயத்திலிருந்து விழுகின்ற மழைத்துளியானது எந்த இடத்தில் விழுந்தாலும் எப்படி சமுத்திரத்தை அடைகின்றதோ,
அது போல எந்த தெய்வத்தை தொழுதாலும் அது கேசவனையே போய் சேருகின்றது என்பது ஆன்றோர் வாக்கு. வாருங்கள் அன்பர்களே அந்த ஆதிகேசவன் இங்கு திருக்கோவில் கொண்டலீலையைப் பற்றிக் காண்போம்.
பலஆயிரம்ஆண்டுகளுக்கும் முன் திருவரங்கத்தில் அரங்கனுக்கு சேவை செய்து வந்த மாதாவாச்சார் என்ற அன்பருக்கு பிள்ளையில்லாக்குறை இருந்தது, அவரும்மனமுருகிஅரங்கனிடம் வேண்ட, அரங்கனும் இவரது கனவில் தோன்றி திருவல்லிக்கேணியில் பார்த்தசாரதிப் பெருமாளையும். திருமலையில் வேங்கடேசப் பெருமாளையும் சேவித்த வர உனது குறை தீரும் என்று அருளினார்.
அரங்கனின் கூற்றுப்படி மாதவாச்சார் மனைவியுடன் திருவரங்கத்திலிருந்து திருவல்லிக்கேணிக்குப் நடைப்பயணமாக புறப்பட்டார். பல நாட்கள் மைல் கணக்காக நடந்து திருவல்லிக்கேணியை அடைய ஒரு காத தூரம் இருந்த போது ஒரு காட்டை அடைந்தனர். சூரியனுடைய கதிர்கள் கூட நுழையமுடியாத அடர்ந்த காடு அது. அந்தி சாயும் நேரத்தில் அடைந்த இருவரும் இப்படி கொடிய மிருகங்கள் வாழும் காட்டில் வந்து சிக்கிக்கொண்டோமோ என்ன ஆகுமோ என்று வியந்து நின்றனர்.
.
இவ்வாறு அடர்ந்த காட்டில் சிக்கிக்கொண்ட தம்பதியருக்கு முன் ஒரு மாடு மேய்க்கும் பாலகன் வந்து அவர்கள் இரவில் தங்கிக்கொள்ள ஒரு பாழடைந்த மண்டபத்தை காண்பித்து விட்டு சென்றான். தம்பதியர் இருவரும் அந்த பாழடைந்த மண்டபத்தில் உறங்கினர், இரவில் இருவர் கனவிலும் அந்த கோபாலன் தோன்றி உங்கள் தலைப்பக்கம் உள்ள என்னுடைய விக்கிரகத்தை எடுத்து பூஜித்தால் உனது குறை தீரும் என்றருளி மறைந்தார்.
மறு நாள் காலை அருகில் இருந்த கிராமத்தாரின் உதவியுடன் அங்கு ஒரு கோவிலை உருவாக்கினார். பின்னர் அரங்கன் ஆணைப்படி திருவல்லிக்கேணி சென்று பார்த்தசாரதிப் பெருமாளையும், திருமலையில் திருவேங்கடமுடையானையும் சேவித்து வந்து தன் கனவில் வந்து அருளிய ஆதி கேசவனுக்கு தன் கைங்கரியத்தைத் தொடர்ந்தார். அவனருளால் அவர்கள் குறை தீர்ந்த்தது. அவரின் சந்ததியினர் இன்றும் கேசவனுக்கு தொண்டு செய்து வருகின்றனர். இது தான் ஆதி கேசவன் இங்கு கோவில் கொண்ட லீலை ஆகும்.
ஸ்ரீபாஷ்யக்காரர் என்றும் உடையவர் என்றும் இராமனுஜர் என்றும் வைணவ சித்தாந்த ஸ்தாபகர் என்றும் போற்றி ஆராதிக்கப்படும் எம்பெருமானார் திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப்பெருமாளை மங்களாசாசனம் செய்ய எழுந்தருளும் போது ஓர் இரவு தங்க நேரிட்டது அப்போது கேசவனின் நியமனப்பட்டி இத்திருக்கோவிலில் தங்கி இப்பெருமானை ஆராதித்து சென்றார். எனவே இத்திருக்கோயில் உடையவர் சந்நிதி என்னும் பெயர் பெற்றது. இன்று பாஷ்யக்கார சுவாமி சென்னை ஆதி கேசவப்பெருமாள் என்றழைக்கப்படுகின்றார்.
சரித்திரம் தொடங்கிய காலத்தில் இருந்தே போர்களும் பூசல்களும் கலவரங்களும், எல்லைத் தகராறும், இனத்தகராறும் மானிட வர்க்கத்தை அலைக்கழித்துள்ளது. நமது பாரத தேசத்தை முஸ்லிம்கள் கைப்பற்ற முயன்ற போது கலவரங்கள் நடைபெற்றன. கொள்ளை கொலைகள் எங்கும் அரங்கேறிக்கொண்டிருந்தன. ஆண்டவன் சந்ந்திக்குள்ளேயே புகுந்து ஆபரணங்கள், விலை மிகுந்து பூஜைப் பொருட்கள் சூறையாடப்பட்டன. ஏன் ஆண்டவனையே களவாட ஆரம்பித்தனர். இப்படிப்பட்ட ஒரு கால கட்டத்தில் , கோயில்களை பாதுகாக்க முடியாத நிலை ஏற்பட்டபோது, பொன்னும், பொருளும் போனாலும் பரவாயில்லை என்று லோக சுபிட்சத்திற்காக உற்சவ மூர்த்திகளையாவது காப்பாற்ற வேண்டும் என்ற சீரிய நோக்கத்துடன் திருவல்லிக்கேணி முதலிய திவ்ய தேச எம்பெருமான்கள், யாருக்கும் புலப்படாத, எளிதாக அடைய முடியாதபடி மரங்கொடிகளால் மறைக்கப்பெற்ற மாபிலம் என்னும் இந்த க்ஷேத்திர சன்னதியில் எழுந்தருளப்பண்ணி வைத்து ஒராண்டு காலம் பாதுகாத்து வந்தார்கள். இவ்வாறு அனைத்து மூர்த்திகளையும் அடைக்கலம் தந்து காத்ததினால் இவர் ஆதி கேசவன் ஆனார். இவர் இத்திருக்கோவிலில் செங்கமலவல்லித்தாயாருடன் சேவை சாதித்து அருள் புரிகின்றார். எனவே பார்த்தசாரதிப்பெருமாள் ஈக்காட்டுத்தாங்கல் எழுந்தருளும் போது ஆதி கேசவன் சந்ந்திக்கு எழுந்தருளுகின்றார்.
ஆயிரம்ஆண்டுகள்பழமையானஇந்தஆலயத்தில்மாசிமாதம்திருவோணநாளைதீர்த்தநாளாகக்கொண்டுபெருவிழாநடைபெறுகின்றது.அப்பெருவிழாவின்மூன்றாம்நாள்காலைஆதிகேசவர்கருடசேவைதந்தருளுகின்றார்.மேலும்வைகுண்டஏகாதசியன்றும்கருடசேவையில்பெருமாளைசேவிக்கலாம்.இந்தவருடபெருவிழாவின்கருடசேவைக்காட்சிகள்இப்பதிவில்இடம்பெறுகின்றன.
“கேசவ!த்ருதசவிதரூப!” என்று ஜெயதேவர் தமது கீதகோவிந்தத்தில் பாடியபடி பத்துவித அவதாரனாகி, தானே தனக்காக, தனக்குள்ளே தானாகி, தானே எல்லாமாகி நின்ற கேசவனைத் தொழுவாருக்கு துயரமில்லை.
கேசவனேக்லேசநாசன்!
இவர் சந்நிதி வந்து வேண்டுபவர்களின் குறைகளை எல்லாம் தீர்த்து வைக்கின்றார் இந்த ஆதிகேசவர். எனவேதான் சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாளும் தனது திருப்பாவையில்
வங்கக்கடல்கடைந்தமாதவனைக்கேசவனை
திங்கள்திருமுகத்துசேயிழையார்சென்றிறைஞ்சி
அங்கப்பறைகொண்டவாற்றைஅணிபுதுவைப்
பைங்கமலத்தண்தெரியல்பட்டர்பிரான்கோதைசொன்ன
சங்கத்தமிழ்மாலைமுப்பதும்தப்பாமே
இங்கிப்பரிசுரைப்பார்ஈரிரெண்டுமால்வரைத்தோல்
செங்கண்திருமுகத்துச்செல்வத்திருமாலால்
எங்கும்திருவருள்பெற்றுஇன்புருவரெம்பாவாய்
என்றுமங்களாசாசனம்செய்துள்ளாள்.
பெருவிழாவின் மூன்றாம் நாள் இரவு ஆதிகேசவப்பெருமாள் அனுமந்த வாகனத்தில் சேவை சாதித்தருளுகின்றார் அக்காட்சிகளையும் காண்கின்றீர்கள்.
நாமும்அடைக்கலம்தந்தஆதிகேசவனிடம்அடைக்கலம்அடைவோமாக
2 comments:
அருமை
நன்றி நாகேந்திர பாரதி
Post a Comment