Showing posts with label திருவல்லிக்கேணி. Show all posts
Showing posts with label திருவல்லிக்கேணி. Show all posts

Sunday, April 24, 2016

பார்த்தசாரதிப்பெருமாள் ஏசல்


சித்திரை பிரம்மோற்சவ கருட சேவை




கடல் அலை போல் பக்தர் வெள்ளம்
அதில் நீந்தி வரும் பார்த்தசாரதிப் பெருமாள் 









இன்று ஏசல் சேவையை சேவிக்கும் பாக்கியம் கிட்டியது.  அதிகாலை 5:30 மணிக்கு கோபுர வாசல் சேவையுடன் கருட சேவை துவங்கியது.  மேற்கு மாட வீதியில் பெருமாள் வழங்கும் அற்புத தரிசனம் காணும் வாய்ப்பு அடியேனுக்கு  கிட்டியது, முதலில் கங்கை கொண்டான் மண்டபம் வரை பக்தர்களின் தேங்காய் பழம் மற்றும் பட்டு துண்டுகளை ஏற்றுக்கொண்டு சேவை சாதித்த பெருமாள் மண்டபம் வந்தவுடன் அப்படியே பின் நோக்கி மாட விதியின் இறுதி வரை சென்று பின்னர் கருடனில் பறந்து வருவது போலவே அற்புதமாக மேள சத்ததிற்கு ஏற்றவாறு ஆடி வரும் அந்த அழகை எப்படி வர்ணிப்பது என்றே தெரியவில்லை. நேரில் வந்து தரிசித்தால் மட்டுமே அதை உணர முடியும்.







சிறு பார்த்தசாரதிகள்




கங்கை கொண்டான் மண்டப சேவை 






Tuesday, June 17, 2014

பார்த்தசாரதிப் பெருமாள் கருட சேவை

  ஜய வருடசித்திரை பிரம்மோற்சவம்








மேற்கு மாட வீதியில் பார்த்தசாரதிப்பெருமாள்



அதிகாலையில்  கோபுரவாசல் சாதித்தபின் தெற்கு சந்நிதி தெருவில்  முதலில் சேவை சாதித்த பெருமாள் பின் மேற்கு மாட வீதியில் வலம் வந்தார். தாங்கள் பார்க்கும் இப்படங்கள் அப்போது எடுக்கப்பட்டவை. இந்த வீதியில் இறுதியில் உள்ள   கங்கை கொண்டான் மண்டபம் வரை பக்தர்களின் தேங்காய்,  பழம், மலர் மாலைகள் மற்றும் பட்டு துண்டுகளை ஏற்றுக்கொண்டு சேவை சாதித்த பெருமாள் மண்டபம் வந்தவுடன் அப்படியே பின் நோக்கி மாட விதியின் இறுதி வரை சென்று பின்னர் கருடனில் பறந்து வருவது போலவே அற்புதமாக மேள சத்ததிற்கு ஏற்றவாறு ஆடி வரும் அந்த அழகை எப்படி வர்ணிப்பது என்றே தெரியவில்லை.



 அலை கடல் ஓரத்தில் மக்கள் கடலின் நடுவே கருடசேவை தந்தருளும் பெருமாள்

பெருமாள் பின்னழகு 



கங்கை கொண்டான் மண்டப வாயிலின் முன்பு


கங்கை கொண்டான் மண்டபத்தில் பெருமாள்



மண்டபத்தில் சிறிது நேரம் மண்டகப்படி கண்டருளி பின்னர் வடக்கு கிழக்கு மாட வீதிகள் வழியாக வாகன மண்டபத்தை அடைந்து பின்னர் ஒற்றை ரோஜா மாலையுடன் ஏகாந்த சேவை சாதித்த வண்ணம் அலங்கார மண்டபத்திற்கு எழுந்தருளுகின்றார். 



சிறுவர்களின்  பெருமாள்


திருவல்லிக்கேணியில் பெருமாள் பல்வேறு வாகனங்களில் சேவை சாதிக்கும் போது அவரைப் போலவே சிறிய பெருமாள்களை அதே போலவே அலங்காரம் செய்து பின்னே சிறுவர்கள் வலம் வருவார்கள். அது போல வந்த ஒரு கருட சேவையை தாங்கள் காண்கின்றீர்கள்.


பின் புறம் கூட தாமரை மலர்களுடன் தத்ரூபமாக அலங்காரம் செய்துள்ளனர்.

இன்னொரு கருட சேவை

Saturday, February 23, 2008

பார்த்தசாரதிப் பெருமாள் மாசி மக கருட சேவை

"ப்ளீஸ்॥ப்ளீஸ்... கண்டிப்பாக 21ம் தேதி பார்த்தசாரதியின் கருட சேவை படத்தைப் போடுங்கள்... நேரில் பார்த்து 4 வருடங்களாகின்றது.."

என்ற அன்பரின் வேண்டுகோளுக்காக பார்த்தசாரதிப்பெருமாளின் மாசி மக தீர்த்தவாரி கருட சேவை கோப்புப் படங்கள்.


புகைப்படங்கள் நன்றி எனது நண்பர் திரு S.A நரசிம்மன் அவர்கள்.

பார்த்தசாரதிப் பெருமாள்
கருட வாகனத்தில் சேவை சாதிக்கும் பெருமாள்
மெரீனாக் கடற்கரையில் பெருமாள்
தீர்த்தவாரி
பெருமாள் ஏகாந்த சேவை
இரவு சேஷ வாகன சேவை
சேஷ வாகன சேவை ( Close up)

Thursday, February 14, 2008

திருவல்லிக்கேணி கருட சேவை

பார்த்தசாரதிப்பெருமாள் கருட வாகனத்தில்

பெருமாள் கையில் சக்கரம் இல்லாமல், முறுக்கு மீசையுடன் வேங்கட கிருஷ்ணர் என்ற திரு நாமத்துடனும், பாரதப் போரில் அர்ச்சுனனுக்கு தேரோட்டியாக, பார்த்தசாரதியாக தேர் ஓட்டிய போது பீஷ்மரின் அம்புகளால் பட்ட காயங்களின் வடுக்களுடன் இந்த கலி யுகத்திலும் சேவை உற்சவராக சேவை சாதிக்கும் திவ்ய தேசம் இரவியின் கதிர்கள் நுழைந்தறியாத திருவல்லிக்கேணி. இத்தலத்தில் பெருமாள் வேங்கட கிருஷ்ணர், தெள்ளிய சிங்கர், கஜேந்திர வரதர், அரங்க நாதர், சக்கரவர்த்தித்திருமகன் என்று ஐந்து கோலங்களில் சேவை சாதிக்கின்றார். ஐந்து பெருமாள்களுக்கும் பிரம்மோற்சவம் சிறப்பாக நடைபெறுகின்றது. ” சித்திரையில் ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் பிரம்மோற்சவம். வைகாசையில் ஸ்ரீ கஜேந்திர வரதர் பிரம்மோற்சவம். 

தெள்ளிய சிங்கர் கருட வாகன சேவை (Close up)

ஆனியில் ஸ்ரீ அழகிய சிங்கர் பிரம்மோற்சவம்
பங்குனியில் இராம நவமியை ஒட்டி இராமருக்கு பிரம்மோற்சவம்.
பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாள் காலை தங்க கருட சேவை சிறப்பாக நடைபெறுகின்றது. காலை 5:30 மணியளவில் கோபுர தரிசனம் சிறப்பு , பின் பெரிய மாடவீதியுலா வருகின்றார் பெருமாள். மண்டகப்படி நடைபெறுகின்றது பெருமாளுக்கு, பட்டுப் பீதாம்பரங்கள் வந்து மலையாக குவிகின்றன.
சிறுவர்கள் தங்களுடைய சிறிய(miniature) கருட வாகன பெருமாளை ஏழப்பண்ணிக் கொண்டு வருவது சிறப்பு.  ஆனி பௌர்ணமியன்று கஜேந்திர மோக்ஷம்.
தெள்ளிய சிங்கர் கருட சேவை
மாசி மகத்தன்று அதிகாலை சமுத்திரக் கரைக்கு கருட வாகனத்தில் பார்த்தசாரதிப் பெருமாள் எழுந்தருளி தீர்த்தவாரி கண்டருளுகிறார். இவ்வருடம் 21-02-08 அன்று மாசி மகம், பெருமாள் அருள் இருந்தால் அவரின் தீர்த்தவாரி கருட சேவையை அன்பர்களுக்கு அளிக்க முயற்சி செய்கின்றேன்.