நாச்சியார் கோவில் கல் கருடன்





பெரிய திருவடியாகிய கருடன் பெருமாளுக்கு எப்படி எப்படியெல்லாம் சேவை செய்கின்றார் பாருங்கள்.
பெருமாள் அசுரர்களை கொல்லும் போது மேலாப்பாய், குளிர்ந்த விசிறியாக
எம்பெருமானின் வெற்றிக் கொடியாக
காய்சினப்பறவையாய் பெருமாளின் பகைவர்களுக்கு தானே எதிரியாக குதிரை பூட்டாத தேராய் பெருமாளுக்கு வாகனமாய் புறக்கணிக்க முடியாத அடியவராய் இவ்வாறு பல் வேறு நிலைகளிலும் பெருமாளுக்கு வேறு துணை வேண்டாத துணையாய் திகழ்பவன்தான் கருடன்.

சன்னதியிலிருந்து கருட சேவைக்காக கல் கருடனை
ஏழப்பண்ணிக்கொண்டு வரும் காட்சிகள்.

கருடனில் வந்து யானையின் துயரம் திருநறையூர் நம்பி தீர்த்த அழகை அவரிடம் பஞ்ச சமஸ்காரம் பெற்ற திருமங்கையாழ்வார் இவ்வாறு பாடுகின்றார்.
தூவாயபுள்ளுர்ந்துவந்து துறைவேழம்
மூவாமைநல்கி முதலை துணித்தானை
தேவாதிதேவனைச் செங்கமலக் கண்ணானை
நாவாயுளானை நறையூரில்கண்டேனே.
மூவாமைநல்கி முதலை துணித்தானை
தேவாதிதேவனைச் செங்கமலக் கண்ணானை
நாவாயுளானை நறையூரில்கண்டேனே.

ஆடும் புள்ளேறி பக்தர் துயர் தீர்க்க ஓடி வரும் பெருமாள்
(கருடன் திருமுகம் மிக அருகில்)
(கருடன் திருமுகம் மிக அருகில்)


இனி கல் கருடன் இத்தலத்திற்கு வந்த வரலாறு. அருகில் இருந்த ஒரு கிராமத்தில் ஒரு சிற்பி கல்லினால் கருடன் செதுக்கி சிறகுகளை அமைத்து பிராணப்பிரதிஷ்டை செய்த போது அந்த கல் கருடன் திடீரென்று பறக்க ஆரம்பித்து விட்டதாம், அதைக்கண்ட சிற்பி ஒரு கல்லை வீச அது கருடனின் அலகை தாக்க கருடன் திருநறையூரில் விழுந்ததாம். பெருமாள் கருடனை இங்கேயே இருக்க வரம் அளித்தார்.
கல் கருடன் தனி சன்னதியில் எழுந்தருளி அருள் பாலிக்கின்றார்.
இவரை 7 வியாழக்கிழமைகள் தொடர்ந்து வழி பட பிரார்த்தனைகள் நிறைவேறும். இவர் விநாயகர் போல மோதகப்பிரியர் இவருக்கு அமிர்த கலசம் என்னும் மோதகம் நைவேத்யம் செய்யப்படுகின்றது, இவ்வாறு மோதகம் படைத்து வழிபடுபவர்களுக்கு நீண்ட ஆயுள், நல்ல ஆரோக்கியம், மற்றும் எல்லா செல்வங்களும் அருளுகின்றார் இவர்.
அடுத்த பதிவில் கல் கருடனில் பெருமாள் சேவை சாதிக்கும் போது நடக்கும் ஒரு அற்புதத்தையும் அதற்கான விளக்கத்தையும் காணலாம்.
20 comments:
ஆஹா, அருமை.
அறியாச் செய்தி, அறியக் கொடுத்தமைக்கு நன்றிகள்.
மிக்க நன்றி ஜீவா சார்,
அடுத்த பதிவையும் மறக்காமல் சேவியுங்கள்.
அருமை அருமை. படங்களோ அற்புதம்! மிக்க நன்றி கைலாஷி.
ஓம் நமோ நாராயணாய ஓம் நமோ நாராயணாய ஓம் நமோ நாராயணாய
அருமை அருமை. படங்களோ அற்புதம்! மிக்க நன்றி
இந்தப் பக்ஷி ராஜாவைப் பார்த்து வருடங்கள் ஓடி விட்டன.
அப்பயொரு ஆகிருதி.
கம்பீரம்.எங்கள் பழைய வீட்டுக் கதவில்
கவல் ட்தெய்வம் போல என் மாமனாரின்ன் அப்பா இவரைப் பொருத்தி இருந்தார்.
என் பிள்ளையிடம் அவனுக்கு இரண்டு வதுதான் இருக்கும்.. ''ராஜா உனக்கு என்ன ஜுரம் வந்தாலும் பக்ஷிராஜான்னு கூப்பிடு எல்லாம் சரியாகிவிடும் என்று சொல்லிக் கொடுப்பார்.
பெரியவர்கள் ஆசியில் குழந்தைகளுக்கும் கருடாழ்வார் மேல் நல்ல பக்தி வந்தது.
இப்போது உங்கள் பதிவில் கண்டு மெய்சிலிர்க்கிறேன். மிக்க நன்றி கைலாஷி.
//ராஜா உனக்கு என்ன ஜுரம் வந்தாலும் பக்ஷிராஜான்னு கூப்பிடு எல்லாம் சரியாகிவிடும் என்று சொல்லிக் கொடுப்பார்.
பெரியவர்கள் ஆசியில் குழந்தைகளுக்கும் கருடாழ்வார் மேல் நல்ல பக்தி வந்தது.//
அருமை, அருமை,
தாயாருக்காக அமிர்தம் கொணர்ந்த தயாபரன் எல்லோரையும் காப்பாற்றட்டும்.
அடடா......என்ன அற்புதமான கல் கருடன்.
நான் கேள்விப்பட்டதோடு சரி. ஒருமுறை கட்டாயம் தரிசனம் ஆகணும்.
ஆமாம். தனிச்சன்னிதியில் இருப்பவரே உற்சவராகவும் இருக்கிறாரா?
ஆம் கல் கருட சேவையின் போது அவரை வெளியே ஏழப்பண்ணுகின்றனர், பின் ஸ்ரீநிவாசப்பெருமாள், திருநறையூர் நம்பி இவரின் மேல் ஆரோகணித்து சேவை சாதிக்கின்றார்.
//நான் கேள்விப்பட்டதோடு சரி. ஒருமுறை கட்டாயம் தரிசனம் ஆகணும்.//
அவசியம் சென்று சேவியுங்கள். கோபுர வாசலில் நின்று நேராக தாயாரையும், பெருமாளையும் சேவிக்கும் ஒரு அற்புதத்தை. எண் தோள் ஈசருக்கு 70 மாடக்கோவில் எடுத்த கோச்செங்கணான் கட்டிய முதல் பெருமாள் கோவிலான இந்த மணிமாடக்கோவிலில் பெறலாம்.
படித்தும்/கேள்விப்பட்டும் இருக்கிறேன் கிந்த கருடாழ்வார் பற்றி, நல்ல தரிசனம் அளித்தீர்கள் கைலாஷி ஐயா!...
அன்பர் எனது நண்பர் தனுஷ்கோடி அவர்கள் மனமுவந்து தன் படங்களை வழங்கினார், அவருக்கும் அந்த ஸ்ரீமந் நாராயணருக்கும் நன்றிகள்.
கட்டுரையும் படங்களும் அருமை. கடல் கடந்து வாழும் எங்களுக்கு கருட சேவையை நேரில் பார்த்தது போன்ற அனுபவம் ஏற்பட்டது. நன்றி.
//கடல் கடந்து வாழும் எங்களுக்கு கருட சேவையை நேரில் பார்த்தது போன்ற அனுபவம் ஏற்பட்டது//
மிக்க சந்தோஷமாக இருக்கின்றது.
ஓம் நமோநாராயணா ஓம் நமோநாராயணா ஓம் நமோநாராயணா
கல்கருட பகவானுக்கு 105 ரூபாய் அனுப்பினால் 7 வாரம் வியாழக்கிழமைகளில் அர்ச்சனை செய்து பிரசாதம் அனுப்பி வைக்கிறார்கள்.வேண்டுதல்கள் பலிப்பதையும் உணரலாம்...மற்ற கோவிலில் இல்லா சிறப்பினை பதிவர் பதிய காத்திருப்போம்..
இக்கோவிலின் இணைய முகவரி..
http://www.kalkarudabhagavan.com
அருமை அருமை. படங்களோ அற்புதம்! மிக்க நன்றி
கருடாழ்வார் பற்றி, நல்ல தரிசனம் அளித்தீர்கள் கைலாஷி ஐயா!...
எங்க ஊர் அருகில் உள்ள நாச்சியார் கோவில் சிறப்பை பதிவு செய்தமைக்கு நன்றி
//இக்கோவிலின் இணைய முகவரி..
http://www.kalkarudabhagavan.com//
உபயோகமான தகவல்களை கொடுத்த சிவா அவர்களுக்கு நன்றி.
//அருமை அருமை. படங்களோ அற்புதம்! மிக்க நன்றி//
வாருங்கள் மோகன் காந்தி. வருகைக்கும் தரிசனத்திற்க்கும் நன்றி.
நன்றி கடையம் ஆனந்த்
Post a Comment